நிதர்சனம்
கண் திறந்த நொடி முதல் கதறலே வாழ்கை!
முதல் அடி வைத்ததும் முத்தமிடும் சமூகம்!
முதல் மதிப்பெண் பெறாவிடில் முற்றிலுமாய் சபித்துவிடும் !
போட்டிகளுக்கு நடுவில் போராட்டமான நொடிகள்!
ஒவ்வொருவன் வீழ்ச்சியிலும் இன்னொருவன் எழுகிறான்!
நிற்க நிழல் தராமல் துரத்தும் சொந்தம்!
நின்றுவிட்டால் நம் நிழலில் ஒதுங்கி கொள்ளும்!
அலையென அடிக்கும் ஆயுளில்!
சிற்பியாய் கரை சேர்ந்தேன்!
கண் மூடும் வேலையில் கண்டேன்;
நான் தேடிய பொருளை- "நிம்மதி"
very aptly said !
ReplyDeletegreat lines. wordings are very nice.
ReplyDelete