நிதர்சனம்
கருவறை வரை தான் கவலையில்லா வாழ்கை! கண் திறந்த நொடி முதல் கதறலே வாழ்கை! முதல் அடி வைத்ததும் முத்தமிடும் சமூகம்! முதல் மதிப்பெண் பெறாவிடில் முற்றிலுமாய் சபித்துவிடும் ! போட்டிகளுக்கு நடுவில் போராட்டமான நொடிகள்! ஒவ்வொருவன் வீழ்ச்சியிலும் இன்னொருவன் எழுகிறான்! நிற்க நிழல் தராமல் துரத்தும் சொந்தம்! நின்றுவிட்டால் நம் நிழலில் ஒதுங்கி கொள்ளும்! அலையென அடிக்கும் ஆயுளில்! சிற்பியாய் கரை சேர்ந்தேன்! கண் மூடும் வேலையில் கண்டேன்; நான் தேடிய பொருளை- "நிம்மதி"